தற்காலிக வீடு பெற்ற மூதாட்டி புதிய தலைமுறை
தமிழ்நாடு

செய்தி எதிரொலி | விழுப்புரம்: கழிவறையில் வசித்த மூதாட்டி... தற்காலிக வீடு கட்டிக்கொடுத்த திமுக MLA!

விழுப்புரம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் வீடு இன்றி, கழிவறையில் தங்கியிருப்பது பற்றி புதிய தலைமுறையில் ஒளிபரப்பான செய்தி எதிரொலியாக, அவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ தற்காலிக வீட்டை அமைத்துக் கொடுத்துள்ளார்.

webteam

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரிமுத்து என்பவர் குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தார். அந்த வீடு சில மாதங்களுக்கு முன்பு இடிந்து போனது. அந்த குடிசையை சீரமைக்க வழியின்றி வறுமையில் இருந்த மூதாட்டி, அரசு கட்டிக் கொடுத்த கழிவறையில் வசித்து வந்தார். இந்த அவலம் குறித்து, கடந்த ஜூலை 21 ஆம் தேதி புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.

திமுக எம்எல்ஏ கட்டிக்கொடுத்த வீடு

இதன் எதிரொலியாக, விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா, மூதாட்டி வசிக்க தற்காலிகமாக இரும்புத் தகடில் வடிவமைக்கப்பட்ட வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார். இது அம்மூதாட்டிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுக்கபட்டுள்ளதால், புதியதலைமுறை செய்தி ஊடகம் மற்றும் வீடு கட்டி கொடுத்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருக்கு மூதாட்டி மாரிமுத்து நன்றியை தெரிவித்துள்ளார்.