தமிழ்நாடு

விழுப்புரம்: கன மழையால் தடுப்பணையில் உடைப்பு - நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

விழுப்புரம்: கன மழையால் தடுப்பணையில் உடைப்பு - நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

kaleelrahman

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பம்பை ஆற்றின் குறுக்கே வாதானூரில் உள்ள சிறிய தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு நீர் அருகில் உள்ள வயல் வெளிகளுக்குள் புகுந்தது. இதனால் வாதானூர், வி.மாத்தூர், செங்காடு, நகரி, மாத்தூர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாக்கம்-ஆரியூர் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.