விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பருதிபுரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவரது மகள்கள் விவசாய கிணற்றில் மூழ்கியதில் 5 வயது கொண்ட அனிதா உயிரிழந்ததால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பருதிபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் வீடுகட்டி வசித்து வருபவர் கோபலக்கிருஷ்ணன். இவர் தங்களது விவசாய நிலத்தில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது மூன்று பெண் குழந்தைகள் வீட்டினருகே உள்ள நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக மூன்று வயது சிறுமி புகழரசி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்து பதறிப் போன அவரது அக்கா அனிதா காப்பாற்ற முற்பட்டுள்ளார். அப்போது இருவரும் கிணற்றில் மூழ்கினர்.
இதனால் பதறிப்போன பெற்றோர்கள் கிணற்றில் மூழ்கிய சிறுமிகளை காப்பற்ற முயன்றுள்ளனர் இதனையடுத்து மூன்று வயது சிறுமி புகழரிசியை மட்டும் அக்கிராம மக்கள் காப்பாற்றினர். தங்கையை காப்பாற்ற முயன்ற அக்கா அனிதா நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து மேல்மலையனூர் தீயணைப்பு துறையினர் உடலை தேடி மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.