தமிழ்நாடு

கிராம சபா கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

webteam

கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ள அவசியம் இல்லை என கூறிய அதிகாரி, ஊராட்சிக்கு தண்ணீர் விட முடியாது என கூறிய பம்பு ஆப்பரேட்டரை கண்டித்து கிராம சபா கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்.

உழைப்பாளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபா கூட்டத்திர்க்கு ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை தண்டோரா மூலமும் அறிவிக்கவில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கூட இல்லாமல் ஊராட்சி செயலாளர் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபா தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராம சபாவில் பங்கேற்க்காமல், அதிகாரிகள் வரும் வரை கிராம சபா கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் கலை 11.00 மணிக்கு வர வேண்டிய அதிகாரிகள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு வந்தனர். மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வந்த பெண் அதிகாரியிடம் பொது மக்கள் தாமதம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த பெண் அதிகாரி உங்கள் கிராம சபா கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என பதில் அளித்துள்ளார். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை கூட்டத்தை நடத்த கூடாது. வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை என்றால் கூட்டத்தை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் தீர்மானத்தை மாற்றி எழுத முயற்ச்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.  மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொள்ளும் மறு கிராம சபா கூட்டத்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் பொது மக்கள் கூறினர். இதனைதொடர்ந்து பொதுமக்கள் சத்தம் போட்டதால் விண்ணமங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் பம்பு ஆப்பரேட்டர்  இனி ஊராட்சி தண்ணீர் விடமாட்டோம் என கூறியதால் பொது மக்கள் கிராம சபா கூட்டத்தை புறக்கணித்தனர்.