தமிழ்நாடு

காவலருக்கு கொரோனா: ஊரின் எல்லைகளை மூடி சீல் வைத்த அதிகாரிகள்!

காவலருக்கு கொரோனா: ஊரின் எல்லைகளை மூடி சீல் வைத்த அதிகாரிகள்!

webteam

பெரம்பலூரில் பணியாற்றிய தலைமைக் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரின் எல்லைகள் மூடப்பட்டன

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை‌ 15ஆக உள்ளது. ஒரே நாளில் 82 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 26.6ஆக உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.1ஆக இருக்கிறது. இந்நிலையில் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனைகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் பெரம்பலூரில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரின் எல்லைகள் மூடப்பட்டன.

தலைமைக் காவலரின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி ஆகும். காவலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து நாவக்குறிச்சி பகுதியை சுற்றி 5 கி.மீ. பரப்பளவு எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன