சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: “திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையேதான் போட்டி” - சீமான்

webteam

செய்தியாளர்: காமராஜ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயா அறிமுக கூட்டம் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து...

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில்... “புயல் வரும் முன் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்று போடும் இவர்கள் மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தினால் பலர் உயிரிழந்ததை முன்பே அறியவில்லையா? அதில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கபட்ட போதே தமிழகம் முழுவதும் எச்சரித்திருக்க வேண்டும். காவல்துறை, புலனாய்வு துறை, சிபிசிஐடி போலீசார் என எத்தனையோ துறைகள் உள்ளன. கள்ளச்சாராய விற்பனை இவர்களுக்கு தெரியாமலா நடைபெறும்? அரசு தன் தவறை மறைக்க லஞ்சம் கொடுக்கிறது. இறப்பிலேயே புனிதமானது சாராயம் குடித்து உயிரிழப்பதுதான். இது ஒரு சரித்தர நிகழ்வு. குடிக்க வைத்து கொலை செய்பவர்கள் இவர்கள்.

மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் செய்த முதல்வர், அமைச்சர் பொன்முடி இன்று மதுக்கடையை மூட மறுக்கிறார்கள். கள்ளுக்கடையை திறக்காமல் கள்ளச் சாராயத்தினை இவர்கள் விற்பனை செய்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்திற்கும் திமுகவின் இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நானும் குற்றச்சாட்டு வைக்கிறேன்.

cm stalin

காவல் துறையினருக்கு படி காசு கொடுக்க முடியவில்லை. ஆனால், சாராயம் குடித்து இறந்தவனுக்கு இழப்பீடு வழங்குவது திமுக அரசின் தவறை மறைக்க, பிணத்தின் மீது பணத்தை கொட்டி மறைக்கிறார்கள். இளம் விதவைகள் திமுக ஆட்சியில் தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறார்கள். சாராயம் குடித்து இறந்தவனுக்கு இழப்பீடு கொடுத்து தவறு செய்ய ஊக்கபடுத்துவது நல்ல அணுகுமுறையும் இல்லை. நல்ல நிர்வாகமும் இல்லை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்களுக்கும் பாமகவிற்கும் போட்டியல்ல திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும்தான் போட்டி” என சீமான் தெரிவித்தார்.