தமிழ்நாடு

நீட் தேர்வை நடப்பாண்டு கைவிட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழக அரசு கடிதம்

நீட் தேர்வை நடப்பாண்டு கைவிட வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழக அரசு கடிதம்

webteam

நீட் தேர்வை இந்தாண்டு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடப்பாண்டு மருத்துவ சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட்,ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, நீட், ஜெ.இ.இ. தேர்வுகள் கட்டாயம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்திருந்தார்,