vijay, bussy anand, Seeman PT
தமிழ்நாடு

"சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தான் முடிவை அறிவிப்பார்" - புஸ்ஸி ஆனந்த்

webteam

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலகத்தை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளார் புஸ்ஸி ஆனந்த திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்....

seeman

"நேற்றைய தினம் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரிக்க நோட்டிபிகேஷன் கொடுத்துள்ளார்கள். அதற்கு உண்டான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறார் அதனை தமிழக வெற்றிக் கழகம் எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”எதுவாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் பதில் சொல்வார்” என்று தெரிவித்தார்.

GOAT படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் அரசியல் களத்திற்கு வருவாரா? என்ற கேள்விக்கு.. ”நாங்கள் இப்போதே மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் தலைவர் தான் எங்களின் அடையாளம் அவர்தான் எல்லா முடிவையும் எடுப்பார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது ஒன்றும் அவசரமே வேண்டாம்.

vijay

நாங்கள் எங்கள் தலைவர் சொல்லும் பணிகளை செய்து கொண்டே இருக்கிறோம். அடுத்ததாக நாமக்கலில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்படும். பதினெட்டாம் தேதி எந்த ஒரு நிர்வாகிகள் கூட்டமும் இல்லை. அந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. எந்த ஒரு தகவலாக இருந்தாலும் தலைவருடைய அனுமதி பெற்று தான் தெரிவிப்போம்.

சீமானின் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.