அஜித் - ரஜினி - விஜய் web
தமிழ்நாடு

’எதிரிக்கு எதிரி நண்பன்..!’ அஜித், ரஜினி ரசிகர்களுடன் இணக்கம் விஜய் ஃபேன்ஸ்! தவெகவின் வியூகம் என்ன?

ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களிலும் பொதுவாகவும் ஒரு இணக்கமான போக்கைக் கடைபிடிக்குமாறு விஜய் தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..

இரா.செந்தில் கரிகாலன்

திரைத்துறை சார்ந்து இருந்த மோதல்களை எல்லாம் முற்றிலும் விடுத்து தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களாக அவர்களை மாற்ற முயற்சி செய்யவேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.., விஜய்யின் இந்த நகர்வுக்கான பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்..

விஜய் முன்னெடுத்திருக்கும் அரசியல்..

திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.. கட்சியின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.. லட்சக்கணக்கான இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்..

தவெக தலைவர் விஜய்

அந்த மாநாட்டிலேயே, தந்தை பெரியார், அண்ணன் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் கட்சியின் கொள்கைத் தலைவராக அறிவித்தார் விஜய்.. அதுமட்டுமல்லாது, அறிஞர் அண்ணாவை, எம்.ஜி.ஆரையும் தனது உரையில் தேவையான இடங்களில் மேற்கோள் காட்டினார்..

அதுமட்டுமல்ல்லாது, ராஜராஜ சோழன், வீரன் அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட மன்னர்கள், வ.உ.சி, முத்துராமலிங்கத் தேவர், இம்மானுவேல் சேகரனார் உள்ள்ளிட்ட தலைவர்கள் என மொத்தமாக 43 பேருக்கு மேடையிலேயே மலர்தூவி மரியாதையும் செலுத்தினார்..

தவெக தலைவர் விஜய்

தவிர, தீபாவளிக்கு வாழ்த்து, முத்துராலிங்கத் தேவர் ஜெயந்திக்கு மரியாதை என அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் விதமாகவே அவரது நடவடிக்கைகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்...

கொள்கை அளவில்கூட திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை...இரண்டும் தமிழ்நாட்டுக்கான கொள்கைதான் என தடாலடியாக அறிவித்து அது பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது வேறுகதை..

கொள்கை அளவில் பாஜகவையும் அரசியல் களத்தில் பாஜகவையும் தவிர மற்ற அனைத்துத் தரப்புக்கு தன்னை ஆதரவானவராகவே காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் விஜய்..

தவெக

செயற்குழு தீர்மானத்தில்கூட, காயிதே மில்லத் பெயரில் விருது, வக்பு வாரியச் சட்ட மசோதாவுக்கு எதிராக தீர்மானம் என இஸ்லாமிய ஆதரவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்..,அரசியல் களத்தில் எல்லாம் சரி, ஆனால், திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் Vs அஜித், பின்னாட்களில் விஜய் vs ரஜினி என இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக மோதிக்கொண்டிருந்தனர்..

மோதிக்கொள்ளும் விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள்..

இந்தநிலையில்தான், கோட் திரைப்படத்தில் அஜித்தை மரியாதை செய்யும் விதமாக சில காட்சிகளில் நடித்திருந்தார் விஜய்.. அதேபோல, ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, சூப்பர் ஸ்டார் எனக் குறிப்பிட்டு அவர் பூரண நலம்பெற வாழ்த்தியிருந்தார் விஜய்.. ஆனால், இன்னமும்கூட, பழைய கசப்புகள் மாறாமல் இருக்கின்றன..

ajith vijay

அவை எல்லாவற்றையும் மாற்றி இணக்கமான போக்கைக் கடைபிடிக்க விஜய் தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது..

விஜய் எடுத்த நடவடிக்கை..

இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,

``நீங்கள் நம்புவீர்களா இல்லை என்று தெரியாது. மிகத் தீவிரமான அஜித் ரசிகர்கள் பலர் எங்கள் மாநாட்டுக்கு வருகை தந்தார்கள்..,அதுமட்டுமல்ல, பல்வேறு இடங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் அவர்கள் இருக்கிறார்கள்..,ஒருவேளை அஜித் கட்சி ஆரம்பித்திருந்தால், அவர்கள் இப்படி நடந்துகொள்வார்களா எனத் தெரியாது..,ஆனால், இப்போது, திரையுலகில் இருந்து ஒருவர் என்கிற ரீதியில் எங்களுக்கு ஆதரவை வழங்கி வருகிறார்கள்..

அஜித் ரசிகர்கள் உடனடியாக மாறியதைப்போல ரஜினி ரசிகர்கள் மாறி வரவில்லை என்பது உண்மைதான்.. ஆனால், அவர்களின் தலைவரே மாநாடு மிகப்பெரிய வெற்றி என வாழ்த்திய பிறகு அவர்களும் இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள்..

rajini - vijay

அதனால்,சமூக வலைதளங்களில் எக்காரணம் கொண்டும் ரஜினி மற்றும் அஜித்தை தரக்குறைவாக விமர்சிக்கக்கூடாது, அவர்களின் ரசிகர்களுடன் தேவையில்லாத மோதல் போக்கைக் கடைபிடிக்கக்கூடாது என எங்கள் தலைவர் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்..,திரைத்துறை சார்ந்து, அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் திமுக காய் நகர்த்தப் பார்க்கிறது..,ஆனால், ரஜினி, அஜித் இருவருமே நேரடியாக திமுகவின் செயல்பாடுகளை, அவர்களின் அதிகாரப் போக்கை எதிர்த்திருக்கிறார்கள்.., அரசியல் களத்தில் எங்கள் எதிரியும் திமுகதான்..,அந்தவகையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற யுக்தியை நாங்கள் கையிலெடுத்து, அஜித், ரஜினி ரசிகர்களுடன் நாங்கள் நல்லுறவோடு இருப்பதுதான் 2026 தேர்தலில் எங்களுக்குக் கைகொடுக்கும்..,திமுகவின் திடீர் அஜித் பாசத்துக்கும் பதிலடி கொடுக்கமுடியும்’’ என்கிறார்கள்..,.