விஜய் முகநூல்
தமிழ்நாடு

’கர்ப்பிணிகள், முதியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும்’ - மீண்டும் வேண்டுகோள் விடுத்த விஜய்!

கர்ப்பிணிகள், முதியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் மீண்டும் தொண்டர்கள், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்ப்பிணிகள், முதியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் மீண்டும் தொண்டர்கள், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு வசதிகள், அறிவுறுத்தல்கள் என அனைத்தையும் தவெகவினர் மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். முன்னதாக, மாநாடு தொடர்பாக மூன்று அறிக்கைகளை வெளியிடிருந்தார் தவெக தலைவர் விஜய்.

அதில் இரண்டாவது கடித்தத்தில், கர்ப்பிணிகள், முதியோர் . குழந்தைகள் மாநாட்டு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ’பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.’ என்று பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து வேண்டு கோள் விடுத்து வருகிறார் தவெக தலைவர் விஜய்.

இந்தவகையில், மாநாடு ஏற்பாடுகளை நேற்றிரவு திடீரென ஆய்வு செய்த அவர், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். இதன்படி, தற்போது மீண்டும் தொண்டர்களுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய், அதில், “ இருசக்கர வாகனத்தில் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம். குழந்தைகள், சிறுவர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டாம். கர்ப்பிணிகள், முதியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

மாநாட்டுப் பந்தலில் 700க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 3 ஆயிரம் காவல்துறையினருடன் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தவகையில், இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தவெகவினர், ரசிகர்கள் என பலர் குவிந்து வருகின்றன. எதிர்ப்பார்த்ததைவிட அதிக மக்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.