தமிழ்நாடு

பேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்!

பேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்!

webteam

தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘பிகில்’ படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்புள்ள விவசாய கடன்களை அடைத்துள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தங்களின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பேனர் வைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘பிகில்’ படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்புள்ள விவசாய கடன்களை அடைத்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு நெல்லை விஜய் ரசிகர்கள் மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மானிட்டர்களை அமைத்து கொடுத்தனர். நெல்லை மாவட்டம் தென்காசியில் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.