தமிழ்நாடு

நாமக்கல்: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

நாமக்கல்: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

JananiGovindhan

நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கரின் பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், பாஸ்கருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி, சட்டப்படியான வருமானத்தை விட பாஸ்கர் தான் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் 315 சதவிகிதத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் உரிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மேலும் இவ்வழக்கின் விசாரணை தொடர்பாக K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட நாமக்கலில் 24, மதுரையில் ஒன்று, திருப்பூரில் ஒன்று என மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F573750614435519%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>