தமிழ்நாடு

அனைவருக்கும் தெரியும்; ஆனால் நடிக்கிறார்கள்!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

அனைவருக்கும் தெரியும்; ஆனால் நடிக்கிறார்கள்!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

webteam

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 21-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக " 'ஜெயலலிதாவை சசிகலா மட்டுமே பார்த்துக்கொண்டார்- இளவரசி சாட்சியம்'- உணர்த்துவது என்ன? " எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

ஜெவிற்கு எப்போவும் ஓர் கெத்து உண்டு. உடல்நிலை மோசாமான பின் அவர் பிறருடனான சந்திப்பை தவிர்த்திருக்கிறார். ஜெ−சசிகலா நட்பு ஆழமானது; அதனால் தான் பலமுறை போயஸ்கார்டனை விட்டு வெளியேற்றினாலும் திரும்பவும் அழைக்கபட்ட ஒரே ஆள் அவர் மட்டுமே, எனவே தன் கடைசி காலம் என உணர்ந்த ஜெ சசிகலாவுடன் நேரத்தை செலவிட்டிருக்கலாம். எனவே இளவரசி கூறுவது உண்மை தான்...என்ன திறமைசாலியாக இருந்தாலும் ஜெ தான் ஓர் முதல்வர்,கட்சி தலைவர்,மக்கள் பிரதிநிதி என்பதை உணராதது ஆச்சர்யமாகவே உள்ளது! பல பிரபலங்கள் மரணம் சர்ச்சையில் முடியும் அதில் ஜெ மரணமும் சேர்ந்துவிட்டது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

எல்லாம் சசிகலாதான் என்று காட்டிக்கொள்ள.

இதில் மர்ம முடிச்சுகள் பல ஒளிந்திருக்கின்றன. அப்போலோ மருத்துவமனையையும், திருமதி சசிகலா அவர்களையும் தீர விசாரித்தால் மட்டுமே இதற்கான உண்மைத்தன்மை வெளியே வரும்...
கொ.அன்புராஜா - மயிலாடுதுறை.

அமைச்சர்கள், MLA-க்கள், ஜெக்கு பிறகு முதல்வர் யார் என்பதை ஆராய்வதில் பிஸியாக இருந்து விட்டனர்.

இனிமேலாவது அரசு மருத்துவமனைகளில் உயர்சிகிச்சைக்கான வசதிகள் செய்ய வேண்டும் என நினைக்க தோன்றுகிறது. அனைவருக்கும் தெரியும் ஆனால் நடிக்கிறார்கள்.

உடனிருந்தது சசிகலா தான். அதிமுகவும் சசிகலாக்குதான் என்பதை தான் உணர்த்துகிறது

நல்லவேள அம்மா இட்லி சாப்பிடாங்க. சரஸ்வதியை விசாரிக்க மறந்துடாங்க