தமிழ்நாடு

கலாச்சார திணிப்பு நடந்து கொண்டு இருக்கிறது! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

கலாச்சார திணிப்பு நடந்து கொண்டு இருக்கிறது! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

webteam

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக "மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி... கலாச்சார ஊடுருவல் அதிகரிக்கிறதா?" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

தமிழ் மண்ணில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தாலும் தவறு தான் , ஆங்கிலத்தில் எடுத்தாலும் தவறு தான்.
தமிழக மக்கள் வரிபணத்தில் படித்துவிட்டு ஆங்கிலத்திலும் , சமஸ்கிருதத்திலும் உறுதி மொழி .
ஏன் தமிழில் உறுதி மொழி எடுக்க முடியாதா.தமிழை புறக்கணிக்கும் எத்தகைய மரபுகளும், சட்டங்களும் , கொள்கைகளும் , சித்தாந்தங்களும் இந்த மண்ணிற்கு தேவையில்லை. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஆம் . கலாச்சார திணிப்பு நடந்து கொண்டு  இருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் தமிழில் தான் பயிற்று மொழி இருக்கிறதா?

ஹிந்தியில் இருந்து சமஸ்கிருதத்திற்கு தாவி விட்ட விந்தை!?சிறு பிழை தானே என ஏற்றால்,சிறிது சிறிதாக முழுதும் புகுத்தி விடுவார்கள். இத்தனை நாளும் இல்லாத அதிசயத்திற்கு, என்ன அவசியம் வந்தது? எதிர்ப்பு வருதா, ஆதரவா என ஆழம் பார்க்கிறார்களோ ?வேரிலேயே கிள்ளிட்டா விருட்சமாக வளர சான்ஸே இல்லை.

இருக்கும் பழக்கத்தை மாற்றுவதன் மூலம்,தாங்கள் நினைப்பதை சாதிக்க முடியும் என்பது கூட காரணமாக இருக்கலாம். அலட்சியமாக இல்லாமல், எச்சரிக்கையாக இருப்பின்,எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கலாம். ஒன்று மாற்றி ஒன்றென வலியப் புகுத்தி, வசப்படுத்தி விட நினைக்கிறார்களா....?!

அரேபிய மொழி உருது இருக்கும்பொழுது இந்திய மொழி சமஸ்கிருதம் இருந்தால் என்ன தவறு. உங்களை யாரும் படிக்க சொல்லவில்லையே அவர்கள் தான் படித்தவர்கள் அது அவர்கள் இஷ்டம்