தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 1-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘2022 மத்திய பட்ஜெட்... ஏற்றமா? ஏமாற்றமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2437371749753052?comment_id=2437847106372183
ஏமாற்றம் மேலும் ஏற்றம் கண்டுள்ளது
https://twitter.com/oshothealtimate/status/1488692175156449280
சிறப்பான பட்ஜெட். இச்சூழலுக்கு ஏற்ப கச்சிதமாக உருவாக்கப்பட்டது.
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2437371749753052?comment_id=2437374283086132
உர மானியம் உணவு மாணியம் பெட்ரோல் பொருள் மாணியம் 100 நாள் வேலை திட்ட கொள்ளை இதன் மூலம் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டிய சுமார் 3 லட்சம் கோடியை பறித்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் 40 ஆயிரம் கோடியை மாதம் தோறும் அதிகமாக பறித்துள்ளது. இந்த 3 லட்சத்து 40 ஆயிரம் கோடியை அப்படியே கார்பரேட்டுக்கு வரியை குறைத்தது மூலம் கொடுத்துள்ளது.
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2437371749753052?comment_id=2437415533082007
விற்கப்பட்டது.. விற்கப்படும்.. பட்ஜெட் 2022
https://twitter.com/SibiSibinandhu1
இது பெரும் ஏமாற்றம் தான். தனிமனிதனுக்கு எந்தவொரு முன்னேற்றமில்லை இந்த பட்ஜெட் மூலம் வசதியானவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல போகிறார்களா. கிரிப்டோ கரன்சி ஒழிக்கவேண்டும் என்று கூறிய மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அதற்கான 30% வரி விதித்துள்ளார்.
https://twitter.com/pbukrish/status/1488516289496707072
மத்திய பட்ஜெட் ஏற்றமே என்பார் பாஜக(சங்கி)!
மத்திய பட்ஜெட் ஏமாற்றமே என்பார் திமுக(உ.பி)!
மத்திய பட்ஜெட்னா என்னங்க என்பார் சாதாரண குடிமக்கள்!
https://twitter.com/Gopiisha1/status/1488511413522149376
நூறு நாள் வேலை திட்ட நிதி குறைப்பு வறுமைகோட்டு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
https://twitter.com/najeeb4social/status/1488507965405605893
பணக்காரர்களுக்கு - ஏற்றம்
ஏழை,நடுத்தர மக்களுக்கு - ஏமாற்றம்