தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு

webteam

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் “ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும். ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள சூழலில் இலவசமாக அதனை தர ஸ்டெர்லைட் அனுமதி கோரியுள்ளது.