தமிழ்நாடு

சென்னை மாநகர மேம்பாலங்களில் செங்குத்து தோட்டம்.. பணிகள் தீவிரம்

சென்னை மாநகர மேம்பாலங்களில் செங்குத்து தோட்டம்.. பணிகள் தீவிரம்

EllusamyKarthik

சென்னை மாநகரில் உள்ள 14 மேம்பாலங்களில் செங்குத்து தோட்டம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

கொரோனா தாக்கத்தினால் பாலங்களின் பில்லர்களில் செங்குத்தாக தோட்டம் அமைக்கும் பணி பல மாதங்களாக மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் அந்த பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி இந்த பணிகளை மேற்கொண்டுள்ளது. மேம்பாலங்கள் துறையை சேர்ந்த அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர். 

ஐஐடி மெட்ராஸ் டிராஃபிக் சந்திப்பு, நார்த் உஸ்மான் சாலை மேம்பாலம், மிண்ட், பெரம்பூர், மகாலிங்கபுரம், உஸ்மான் சாலை, டிடிகே சாலை சந்திப்பு, காவேரி மருத்துவமனை, ராயப்பேட்டை ஹை ரோடு, நந்தனம் மூப்பனார் மேம்பாலம், எல்.பி சாலை, காந்தி மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செங்குத்து தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. 

சுமார் 8.15 கோடி ரூபாயில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.