madras high court pt desk
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

webteam

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

EPS

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். அவதூறு கருத்திற்கு ஆதாரம் இருப்பதாக கே.சி.பழனிசாமி தரப்பும், பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த போதே கே.சி.பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கே.சி.பழனிசாமிக்கு எதிரான கருத்துகள் அவதூறானவை இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.