தமிழ்நாடு

விவசாயிகளின் நலன்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு

Rasus

விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் நலன்கள் மீதும் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். ஜாதி, மதங்களின் அடிப்படையில் பிரிந்து கிடப்பதை விட்டுவிட்டு அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், மதத்திற்கு அப்பாற்பட்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் பாகுபாடுகளை இந்த தீர்ப்பு களைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார், ப்ளாஸ்டிக் டெக்னாலாஜி படிப்புகளுக்கு சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள சிப்பெட் கல்வி நிறுவனத்தில் அதிகளவு மாணவர்கள் பட்டம் பெறும் வகையில் இடங்கள் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.