தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு

நிவேதா ஜெகராஜா

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வரும் 28-ம் தேதி மாலை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஜூன் 3 -ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 16 அடியில் ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் தயாராகும் இந்த சிலை 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை தயாரிக்கப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் இந்த சிலையை வரும் 28-ம் தேதி இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1975-ம் ஆண்டிற்கு பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.