தமிழ்நாடு

வேல் யாத்திரை வழக்கில் பரபரப்பாக நடந்த விசாரணை: நவம்பர் 10-க்கு ஒத்திவைப்பு !

வேல் யாத்திரை வழக்கில் பரபரப்பாக நடந்த விசாரணை: நவம்பர் 10-க்கு ஒத்திவைப்பு !

jagadeesh

வேல் யாத்திரை தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இன்று மாலை இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சத்தியநாராயணா பாஜக தரப்புக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். அப்போது நீதிபதி " டிசம்பர் 6ம் தேதி யாத்திரையை நிறைவுப்செய்வதாக கூறியுள்ளிர்கள். அந்த தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும். குறைவான தூரமுள்ள வழித்தடங்கள் உள்ள நிலையில், கோவிலுக்கு செல்வது - நகருக்குள் வருவது - கோவிலுக்கு செல்வது என ஏன் அமைத்தீர்கள். உங்கள் கட்சியினரை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். கோவிலுக்கு மட்டும் நீங்கள் செல்லவில்லை. மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்கிறீர்கள்"

"உங்கள் திட்டப்படி கோவில்களில் மட்டும் கூடுவதாக குறிப்பிடவில்லை. மாநிலம் முழுதும் நீண்ட பேரணிபோல திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் கட்சியினரை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். நீங்கள் காவல்துறையிடம் புதிதாக மனு கொடுங்க. அவர்கள் இறுதி முடிவெடுப்பார்கள்"

பாஜக: நாங்கள் 15 வாகனங்களில் 30 பேர் மட்டுமே கோயிலுக்குள் செல்லுவோம் நீதிபதிகள்: நம் நாட்டில் அரசியல் மாச்சர்யங்களுக்கு தீர்வு காண நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது.

பாஜக: டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. 30 பேர் யாத்திரை செல்வதில் என்ன அபாயம் இருக்கப் போகிறது. தலைவருக்கு பாதுகாப்பு கோருகிறோம்.

அரசு தரப்பு: பாதுகாப்பு கோரவில்லை. யாத்திரைக்கு அனுமதி கோரியுள்ளனர்.

பாஜக: வழக்கை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். எத்தனை பேர் யாத்திரையில் கலந்து கொள்வர், எத்தனை பேர் 65 வயதை கடந்தவர்கள் என அனைத்து முழுமையான விரிவான விண்ணப்பம் அளிக்கப்படும். அரசு நிபந்தனை விதித்தால் அதை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தயார். 30 பேர், 15 கார்களுடன், அனைத்து விதிகளும் பின்பற்றினால் அனுமதி அளிக்கப்படுமா?

நீதிபதிகள்: பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரை முடிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூட அனுமதிக்கும் அரசு, வேல் யாத்திரையை மட்டும் எதிர்ப்பது ஏன்??

பாஜக: அப்படியானால் டிசம்பர் 5ல் முடித்து கொள்கிறோம். ராமர் கோவில் பூமி பூஜையில் வழக்கு தொடுத்த முஸ்லிம்களும் கலந்துகொண்டனர் இவ்வாறாக வாதம் நீண்டது. பாஜக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்வதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.