தமிழ்நாடு

சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு: வேல்முருகன் டிஜிபியிடம் புகார்

சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு: வேல்முருகன் டிஜிபியிடம் புகார்

Rasus

கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்ட தமிழ் சமூக ஆர்வலர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யும் சில காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று‌ டிஜி‌பியிடம் மனு அளித்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், சமீப காலமாக ‌‌நெல்லை வழக்க‌றிஞர் ராஜரத்தினம்,‌ சுற்றுச்சூழல் போராளி முகிலன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறை ‌பொய் வழக்குகளை பதிவு செய்வதை தடுக்கவும், ‌அவர்கள் மீது பதிவு ‌செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய‌க் கோரியும் தமிழக காவல்துறை டிஜிபியிடம் மனு அளித்ததாகத் கூறினார். கார்ட்டூனிஸ்ட் பாலாவை எதற்காக கைது செய்கிறோம். எங்கே அழைத்து செல்கிறோம் என்று கூட தெரிவிக்காமல் காவல்துறை அத்துமீறி செயல்பட்டதாகவும் வேல்முருகன் கூறினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வன்னியரசு, மனித நேய மக்கள் ‌கட்சியின் ஜவாஹிருல்லா, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.