வேலூர் pt
தமிழ்நாடு

வேலூர்: பேருந்து ஓட்டுநரின் உரிமம் 3 மாதங்கள் ரத்து.. இதுதான் காரணம்!

வேலூரில் செல்போனில் பேசியவாறு பேருந்து ஓட்டியவரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

PT WEB

வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசியபடி ஒரே கையால் பேருந்தை இயக்கியுள்ளார். அஜாக்கிரதையாக அவர் பேருந்தை ஓட்டும் காட்சியை பயணிகள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், பேருந்து ஓட்டுநர் ராஜேஷிடம் விசாரணை நடத்திய பிறகு அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்தார். இதுபோல் வாகனங்களை அஜாக்கிரதையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ்!