தமிழ்நாடு

வேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து

வேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து

webteam

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் 4 இடங்களில் நாளை அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக தமிழகத்தில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு நாளைய தினம் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களையும் ஊழியர்கள் விடுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி நேற்று தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு 4 இடங்களில் அரசு பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்படி ஆகிய இடங்களில் நாளை விடுமுறை ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் சிலர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில், பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை ரத்து செய்து மாலை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுகுமாறன் என்ற சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.