நிலத்தில் இருந்து பறிக்கப்பட்ட செடியில் இருந்து நிலக்கடலையை தனியாக பிரிக்க நவீன எந்திரத்தை விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த விவசாயி பள்ளேரி ராஜா. இவர் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறார். நிலக்கடலை செடியை பறித்த பின், அதிலிருந்து நிலக்கடலையை பிரிக்கும்போது, அதிக கடலைகள் வீணாவதை ராஜா கண்டுள்ளார். இதனை தடுக்க வேண்டும் என திட்டமிட்ட இவர், அதற்காக ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார்.
பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இந்த இயந்திரத்தில், நிலக்கடலை செடியை நுழைத்தால், அது கடலையை பிரித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயி ராஜாவின் இந்தக் கண்டுபிடிப்பு 35 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விவசாய கருவி கண்டுபிடிப்புக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர், சக விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.