தமிழ்நாடு

வேலூர் மக்களவைத் தேர்தல் : ஒரு மணி நிலவரம் 

வேலூர் மக்களவைத் தேர்தல் : ஒரு மணி நிலவரம் 

webteam

வேலூர் மக்களவைத் தொகுதியில் ஒரு மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களார்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்கள் ‌அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. வரும் 9ஆம் தேதி வாக்கு‌ எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் ஒரு மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வேலூர்- 27.73%, அணைக்கட்டு - 27.14%, கே.வி.குப்பம், 30.75%, குடியாத்தம் - 32.43%, வாணியம்பாடி - 30.21%, ஆம்பூர் - 31.48% என்பன முறையே வாக்குகள் பதிவாகியுள்ளன.