தமிழ்நாடு

காரில் வந்து கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற நபர்கள்..! - சிசிடிவியில் அம்பலம்

காரில் வந்து கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற நபர்கள்..! - சிசிடிவியில் அம்பலம்

webteam

நாட்றம்பள்ளி அருகே நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து மடிக் கணினி உள்பட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பையன பள்ளி கூட்டுரோடு பகுதியில் வசித்து வரும் யாசர் என்பவர், அதே பகுதியில் சென்னை To பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைநடத்தி வருகிறார். இந்நிலையில் யாசர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் மெயின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தெரிய வந்துள்ளது. 

உடனே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளனர். அப்போது இனோவா காரை கடையின் அருகில் நிறுத்திவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருந்திருந்தால் இதுபோன்ற திருட்டைத் தடுக்கலாம் என்று  ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.