வகுப்பு ஆசிரியர் பணியிடை நீக்கம் pt desk
தமிழ்நாடு

வேலூர்: பள்ளி மாணவியின் வளைகாப்பு ரீல்ஸ் வெளியான விவகாரம் - வகுப்பு ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

webteam

சேய்தியாளர்: ச.குமரவேல்

வேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவிகள் சிலர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி விசாரணைக்கு உத்தரவிட்டு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

மாணவியின் ரீல்ஸ்

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அப்பள்ளியின் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு, தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா மற்றும் பணியில் இருந்த ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் மதிய உணவின் போது ஆசிரியர்கள் மாணவர்களுடனே அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ‘பள்ளிக்கு வரும் மாணவர்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்; வகுப்பு ஆசிரியர்கள், பாட பிரிவு ஆசிரியர்கள் பாட வாரியாக மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை கண்காணிக்க வேண்டும்’ என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.