புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ், நாகலாந்தைச் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் அதிக அபராதத்தை விதித்து புதிய வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி விதிக்கப்படும் அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அபராதத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் திருத்திக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்தார். இதனையடுத்து சில மாநிலங்கள் அபராதத்தை தொகையை குறைக்கவும் செய்துள்ளன.
இந்நிலையில், புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ், நாகலாந்தைச் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியது, வாகன காப்பீடு, வாகன உரிமம் இல்லாதது, 5 ஆண்டுகளுக்கு வரி கட்டாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களுக்காக இந்த ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.