தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை திடீர் உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை திடீர் உயர்வு

webteam

சென்னையில் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளில் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.  
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வால் குறைவான அளவே காய்கறிகளை வாங்க முடிவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.