தக்காளி புதியதலைமுறை
தமிழ்நாடு

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை ரூ.50 குறைந்தது

PT WEB

சமீபகாலமாக அதிகரித்து வந்த காய்கறிகளின் விலையானது இன்று ஒரே நாளில் மழை காரணமாக குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலையானது ஒரு கிலோவிற்கு ரூ.50 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக காய்கறியின் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்பொழுது குறையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக 120 ரூபாயைத் தாண்டி விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதே போல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைத்தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோ 20 ரூபாய் வரை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேட்டை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வியாபாரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளும் பழங்களும் அழுகும் நிலை உருவாகியுள்ளது என்று வியாபாரிகள் வருத்தமடைந்துள்ளனர்.