வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி - தூத்துக்குடி PT
தமிழ்நாடு

தூத்துக்குடி | ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

PT WEB

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கோவில்பட்டி ஸ்ரீகரா வித்யா மந்திர் CBSE இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சி நேற்று (21 ஆகஸ்ட், 2024) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஹரிஹரா வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் சசிகுமார், மற்றும் பள்ளியின் மேலாளர் மாரீஸ்வரன், தலைமையாசிரியை காந்திமதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்..

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில்,

  1. தொழில்நுட்ப நகரம்,

  2. நவநாகரீக தொழில்நுட்ப முறையில் வீட்டை பூட்டும் தொழில்நுட்பம்,

  3. மின்சாரம் இல்லாமல் சுத்தப்படுத்தும் கருவி

  4. மற்றும் மின்சாரம் இல்லாமல் தண்ணீர் ஏற்றும் தொழில்நுட்பம்

உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் உள்ள அறிவியல் படைப்புகளை கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் வந்து கண்டுகளித்தனர்.

அறிவியல் கண்காட்சியில் முதுநிலை பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவிகள் P.ஹர்ஷிதா ஸ்ரீ, B.வசந்த லட்சுமி ஆகியோர் முதல் பரிசினை வென்றனர்.

இளநிலை பிரிவில் ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் சேர்ந்த S.Saeedhaffridi, K.Tanmay ஆகியோர் முதல் பரிசினை வென்றனர்.

முதல் பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.