நாமக்கல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாமக்கல் | ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது.

PT WEB

நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் 23 ஆகஸ்ட் 2024 அன்று புதிய தலைமுறையின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் ராஜேந்திரன், ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் திருப்பதி அவர்களும், கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் வி. மோகன் அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் 40 கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், 350 கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் நிலச்சரிவு ஏற்படுவதை கண்டறிந்து மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்கள் கவர்ந்தது.

பின்னர் நிகழ்ச்சியில் புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் திருப்பதி அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி அறிவியல் குறித்த கேள்விகளுக்கு சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அரசு உயர் நிலை பள்ளியை சேர்ந்த சீனியர் பிரிவில் வெற்றி பெட்ரா மாணவிகள் நதியா, கவுசியா ஆகியோர் மலைவாழ் மக்களுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் பேக் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசினை பெற்றனர்.

ஜூனியர் பிரிவில் KSR அக்க்ஷரா அகாடமியை சேர்ந்த திவித்வ், குமரகுருபரர் ஆகியோர் கண்டுபிடித்த வாழையில் பேப்பர் தயாரிப்பு முதல் பரிசினை வென்றது. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், முதல் பரிசினை தட்டி சென்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இளநிலைப் பிரிவில் குமரகுருபன் மற்றும் திவிதவ் ஆகியோருக்கும் முதுநிலைப் பிரிவில் நதியா மற்றும் கௌசியா ஆகியோருக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும், நினைவுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.