கன்னியாகுமரி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி | ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி 23 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது.

PT WEB

இளம் மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை மேன்படுத்தவும் மாணவர்களின் புது அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கவும் புதியதலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் அறிவியல் திறன் வளர்க்கும் இந்த நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் கடந்த 23 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரவின் கெளதம் மற்றும் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் தலைவர் வெனிஸ்லாஸ் பள்ளியின் தாளார் பியூலா பத்மபாய் வெனிஸ் ஆகியோர் காலையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 250 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நவீன தொழில்நுட்பம் பல்வேறு வகையான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் இயங்குநர் ஆலன் மேஜர் வெனிஸ் மற்றும் பள்ளியின் முதல்வர் லட்சுமி கலா மற்றும் மாவட்ட சுற்றுப்புற சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர் விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் தலைவர் வெனிஸ்லாஸ் பள்ளியின் தாளார் பியூலா பத்மபாய் வெனிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த விஞ்ஞானி, முன்னாள் பொதுநிர்வாக இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) டெஸ்ஸி தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

ஜூனியர் பிரிவில் மவுண்ட் லிட்ரா ஸ்கூல் மாணவிகள் சோனா ஹரிணி மற்றும் அசரா ஜூடித் மாணவிகளுக்கு முதல் பரிசை டெஸ்ஸி தாமஸ் மூத்த விஞ்ஞானி, முன்னாள் பொதுநிர்வாக இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கினார்கள்.

சீனியர் பிரிவில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜெஸ்வின் பால் மற்றும் ஸ்வீடன் ஐன்ஸ்டீன் முதல் பரிசை மூத்த விஞ்ஞானி, முன்னாள் பொதுநிர்வாக இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) டெஸ்ஸி தாமஸ் அவர்கள் வழங்கினார்கள்.