வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி  வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
தமிழ்நாடு

'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' விழா சிறப்பாக தொடங்கியது..!

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்

PT digital Desk

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் AAA இன்டர்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து     11-வது ஆண்டாக நடைபெறும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும்  பள்ளியின் இணைச்செயலாளர் விக்னேஷ் குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் புதிய தலைமுறை சார்பாக ஆட்சியர் ஜெயசீலனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 700க்கும் அதிகமான மாணவ மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆட்சியரிடம் காட்சிப்படுத்தி செயல் விளக்கம் அளித்தனர்.

 அதன் பின்னர்  அன்று  மாலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கி  கௌரவித்தனர்.

 ஜூனியர் பிரிவில்  ரங்கா ராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அபினவ்  முதல் பரிசை தட்டி சென்றனர்.

 சீனியர் பிரிவில் ஜேசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த நிர்மல் குமார் மற்றும் நித்திய பிரியா  முதல் பரிசை தட்டி சென்றனர்.

சிவகாசி AAA இண்டர்நேஷனல் பள்ளில் நடைபெற்ற புதிய தலைமுறைவீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் பரிசு அளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிவகாசி சார்ஆட்சியர் பிரியா ரவிசந்திரன்.