தமிழ்நாடு

வேதாரண்யத்தில் சீறும் கடல்: சிரமத்தில் மீனவர்கள்

வேதாரண்யத்தில் சீறும் கடல்: சிரமத்தில் மீனவர்கள்

webteam

வேதாரண்யம் கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருந்துகின்றனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தோடு காணப்படுவதோடு, பலத்த காற்றும் வீசி வருவதால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அதனால் 800க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து ஐந்து நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவார‌ணம் கூட முறையாக வழங்கப்படவில்லை என மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.