தமிழ்நாடு

அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ: நேரில் சென்று வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி ஆணையர்!

அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ: நேரில் சென்று வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி ஆணையர்!

webteam

வாணியம்பாடியில் நேற்று உழவர்சந்தை அருகில் உள்ள சி.எல்.சாலை பகுதியில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிகளை மீறி கடை திறந்திருந்ததாகக் கூறி பழக்கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளை சூறையாடினார். பழங்களை சாலையில் வீசி, தள்ளுவண்டிகளை தலைக்குப்புற கவிழ்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நகராட்சி ஆணையரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தனது கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ,வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர். இது குறித்து தெரிவித்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், கோயம்பேடு சந்தை போல கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுமோ என்ற அச்சத்தில் இப்படி செய்துவிட்டேன் என தெரிவித்தார்