Police raid pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி: கொலை குற்றவாளிகளுடன் தொடர்பு - இளைஞர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

“தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய, கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு கொலை குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும். அவர்களோடு தொடர்புடையவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஏடிஜிபி அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Police raid

இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டடோர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்த செல்போன், மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து அப்துல் ரகுமானை கைது செய்து அவரிடம் தனிப்படை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2021 செப்டம்பர் 10ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கூலிப்படையைச் சேர்ந்த செல்லா என்ற செல்வகுமார் ஆகியோர் புகைப்படங்களை வைத்து இவர் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தார் என தெரியவந்துள்ளது. அதனால் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஏதாவது திட்டம் தீட்டியுள்ளாரா? அல்லது வீட்டில் போதைப் பொருட்கள் ஏதாவது வைத்துள்ளாரா? என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.