மோசடி செய்த தம்பதியர் புதியதலைமுறை
தமிழ்நாடு

வாணியம்பாடி | 30 பேரிடம் 35 லட்சம் ரூபாய்.. மகளிர் சுய உதவிக்குழு பெயரில் மோசடி -தலைமறைவான தம்பதி!

வாணியம்பாடி அருகே மகளீர் குழு நடத்தி 30 பேரிடம் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு கணவருடன் தலைமறைவான பெண் மீது காவல் நிலையத்தில் புகார்கள்..

PT WEB

வாணியம்பாடி அருகே மகளிர் குழு நடத்தி 30 பேரிடம் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு கணவருடன் தலைமறைவான பெண் மீது காவல் நிலையத்தில் குவிந்த புகார்கள். வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தம்பதியினரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், மார்த்தா என்ற பெண் அர்ச்சனாவை மகளிர் குழுவில் சேர்ப்பதாக கூறி அர்ச்சனாவின் ஆதார் கார்டு மற்றும் அவரது கையொப்பத்தை பெற்றுக்கொண்டு , இரண்டு மாதங்களாக தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் அர்ச்சானவின் வீட்டிற்கு வந்த தனியார் வங்கி ஊழியர்கள், அர்ச்சானாவின் பெயரில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனா இதுகுறித்து மார்த்தாவின் கணவர் உதயா மற்றும் அவரது சகோதர்களிடம் கேட்ட போது, அவர்கள் அர்ச்சனாவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் வேளாங்கண்ணி என்பவரை மார்த்தாவின் கணவருடன் திருமணம் ஆனதாக திருமண பத்திரிக்கை அடித்து அவர் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி என்ற மூதாட்டியை இடம் ஆதார் அட்டை பெற்று கொண்டு ஆதார் அட்டையில் வயது குறைவாக போலி ஆதார் அட்டையை தயார் செய்து 1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்று உள்ளார் மார்த்தா...

இதே போன்று 30 நபர்களிடம் ஆதார் கார்டு மற்றும் அவர்களின் கையொப்பத்தை பெற்று 35 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அர்ச்சானா வாணியம்பாடி கிராமிய காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் மார்த்தா மற்றும் அவரது கணவர் மற்றும் சகோதரரை பிடித்து விசாரணை மேற்கொண்டு நாங்கள் பெறாத பணத்தை பெற்று வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.