தமிழ்நாடு

வந்தவாசி: 73 ஆண்டு பழமையான அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி காயம்

வந்தவாசி: 73 ஆண்டு பழமையான அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி காயம்

webteam

தெள்ளாறு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவி காயமடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாறு பெண்கள் உயர்நிலைப் பள்ளி கட்டடம் 1949 ஆம் வருடம் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டது. இந்த பழைய கட்டடம் தற்போது சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த பள்ளியின் நடுப்புறம் அமைந்துள்ள கட்டடம் மிகவும் மோசமாக உள்ளதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த கட்டடத்தை இடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று பள்ளி கழிவரையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சி லேசாக பெயர்ந்து விழுந்ததில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் காலில் லேசாக காயம் ஏற்பட்டது. அதேபோல் பள்ளி கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் மாணவிகள் தினமும் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், 70 வருட பழைய பள்ளி கட்டடங்களை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.