தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா: மலக்குடல் பிரச்னையால் அவதி; அறுவை சிகிச்சைப் பின் பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் பூங்கா: மலக்குடல் பிரச்னையால் அவதி; அறுவை சிகிச்சைப் பின் பெண் சிங்கம் உயிரிழப்பு

kaleelrahman

வண்டலூர் பூங்காவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் சிங்கம் உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 25 வயதான புவனா (எ) விஜி, பெண் சிங்கம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து மலக்குடல் பிரச்னை காரணமாக ஒருமாத காலமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மிகவும் மோசமானதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 7 மணியளவில் பெண் சிங்கம் உயிரிழந்தது. கடந்த வாரம் 27 ஆம் தேதி விஷ்ணு என்ற ஆண் சிங்கம் ஒன்று வயது முதிர்வால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த மூன்றாவது சிங்கம் இதுவாகும்.