Vanathi srinivasan pt desk
தமிழ்நாடு

“திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார் கமல்ஹாசன்” - வானதி சீனிவாசன் விமர்சனம்

“ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செயல்படுகிறார்” என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Kaleel Rahman

கோவை பந்தய சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை இன்று துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, “சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்லும் நிலைமை மாறி கீழிறங்கிச் செல்கிறது. மாநில அரசின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துதான் கவலைப்படுகிறார்கள். கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னை சரியாகும் என்றார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

kamal hassan

மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது அக்கட்சியினர் ‘மாற்றத்தை கொண்டு வருகிறோம்’ என்றார்கள். ஆனால் இப்போது கூட்டணி வைத்துள்ளனர். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸூடன் சேர்ந்திருப்பது ஏன்? ஊழல் கரை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல் வலம் வருகிறர்.

பாஜக, கோவையில் மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். பாஜக-வின் வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் வெளியே சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள்.

Annamalai

உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரின் பிரசாரம் பாஜகவிற்கு உறுதுணையாக உள்ளது. கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்” என்றார்.

அவரிடம் கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கெனவே விளக்கம் கொடுத்துவிட்டார்” என்றார்.