தமிழ்நாடு

கால்வாயில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை அமைச்சரிடம் ஒப்படைப்பு

கால்வாயில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை அமைச்சரிடம் ஒப்படைப்பு

webteam

சென்னையில் கடந்த மாதம் 15ஆம் தேதி கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சமூக நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கழிவுநீர் கால்வாயிலிருந்து ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு ஒருமாதமாக மருத்துவர்கள் பராமரிப்பில் இருந்த குழந்தையை, இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைப்படி சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தார். 

அந்தக் குழந்தைக்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காருண்யா என்ற தனியார் தொண்டு நிறுவனத்திடம் வளர்ப்பதற்காக குழந்தை வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் தாய்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு பால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், சுதந்திரத்திற்கு மாதந்தோறும் ரூ.2,165 பராமரிப்பு செலவுத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.