vaiko pt desk
தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை" - வைகோ

webteam

செய்தியாளர்: பால வெற்றிவேல்

சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

Governor RN Ravi

அப்போது பேசிய அவர்...

முதலமைச்சர், அமெரிக்க பயணத்தின் மூலம் 7 ஆயிரம் கோடி முதலீடு தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மூடிவிட்டுச் சென்ற ஃபோர்டு கம்பெனியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்கு திராவிட இயக்கமும், திமுகவும் இணைந்து செயல்படுவதைபோல் மதிமுகவும், திமுகவிற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை என்று தெரிவித்த அவர் தொடர்ந்து... தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் பதவியே தேவையில்லாதது என்றார்.

Thirumavalavan

மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.