வைகோ vs பிரதமர் நரேந்திர மோடி PT WEB
தமிழ்நாடு

"90 முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது" - வைகோ ஆவேச பேச்சு!

விமல் ராஜ்

திருப்பூர் செய்தியாளர் - சுரேஷ் குமார்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் காந்திநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பாதுகாக்கவும், இந்தியாவைப் பாதுகாக்கவும் I.N.D.I.A. கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்து விட்டனர். இந்த வெற்றி காஷ்மீர் வரை எதிரொலிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இந்த ஒரே ஆண்டில் 9 முறை வந்துவிட்டார். அவர் 9 முறையல்ல 90 முறை வந்தாலும் பாரதிய ஜனதா தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. மோடி கண்ணியமாகப் பேச வேண்டும். மாறாகத் தமிழக மக்கள் புண்படும் வகையில் பேசி வருகிறார். நடுநிலையாகப் பேசாமல் கடுமையாகப் பேசி வருகிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை

திராவிட இயக்கத்தை அழிப்பதாகத் தெரிவித்து வருகிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. பெரியார் திராவிடர் கழகத்தை, அண்ணா திமுகவை, எம் ஜி ஆர் அதிமுகவை, நான் மதிமுகவை உருவாக்கினேன் எங்களுக்குள் தகராறு இருக்கும். ஆனால் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது. தற்போது தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வந்து நாடகம் ஆடி வருகிறார் மோடி. தமிழர்களை அவரால் ஏமாற்ற முடியாது" என்றார்.