தமிழ்நாடு

ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்

ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்

webteam

தொடர்மழை எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. 

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய தேவை மற்றும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது வைகை அணை ஆகும். கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 63.78 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் அதிகளவு நீர்வரத்து காரணமாக இன்று 64.60 அடியாக ஒரே நாளில் ஒரு அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3661 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1560 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விரைவில் வைகை அணை நிரம்பும் என எதிர்பார்க்கபடுகிறது. 68 அடியினை எட்டியவுடன் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியினை எட்டியவுடன் 3ம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு, அணைக்கு வரும் நீர் முழுவதுமாக திறந்து விடப்படும்.