தமிழ்நாடு

ஆங்கிலப் புத்தாண்டு: வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு

ஆங்கிலப் புத்தாண்டு: வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு

கலிலுல்லா

ஆங்கிலபுத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வடபழநி முருகன் கோவிலில், இன்று அதிகாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக, பொது தரிசனம் தவிர, 50 ரூபாய் சிறப்பு வழி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாய முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி ஆகியோர் செய்துள்ளனர்.