தமிழ்நாடு

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை: தமிழக போக்குவரத்து துறை

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை: தமிழக போக்குவரத்து துறை

webteam

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என தமிழக போக்குவரத்துதுறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரவில் அரசு பஸ்கள் ஓடாததால் 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பகலில் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. 70 ஆயிரம் அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கட்டாயமில்லை” எனத் தெரிவித்தார்.

சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.