தமிழ்நாடு

அரியலூரில் நாளை முழு ஊரடங்கு இல்லை - மாவட்ட ஆட்சியர்

அரியலூரில் நாளை முழு ஊரடங்கு இல்லை - மாவட்ட ஆட்சியர்

webteam

அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாவட்டங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. அதிக கூட்டம் கூடுவதைத் தடுக்க இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மே 3-ஆம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை திறக்கலாம் என்றும்,பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.