தமிழ்நாடு

ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்புக்கு காரணமானதா மழைநீர் தேக்கம்?

ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்புக்கு காரணமானதா மழைநீர் தேக்கம்?

webteam

உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டியில் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (ஜேசிபி டிரைவர்) - வள்ளிமீனா தம்பதியினர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. வள்ளிமீனா, தங்களின் முதல் குழந்தையுடன் தனது தாய் வீடான மூப்பபட்டிக்கு சென்றிருந்திருக்கிறார்.

மேலும் கவின்சாரதி (ஒன்றரை வயது) என்ற இரண்டாவது குழந்தையை சின்னச்செம்மேட்டுப்பட்டியில் உள்ளள பாட்டி முருகாயிடம் விட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாட்டி முருகாயியின் வீட்டு அருகே இருந்து பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அப்போது வெளியே விளையாட சென்ற ஒன்றரை வயது சிறுவன், அங்கிருந்த சேற்றில் வழுக்கி பள்ளத்தில் விழுந்து நீரில் முழ்கி பலியானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒன்றரை வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.